முதலடி 2: ஆண்டவராகிய இயேசு கொடுக்கும் மன்னிப்பு, புது வாழ்வு

ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்து என்னுடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டார் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

என்னுடைய பாவ வாழ்க்கையை நினைத்து பார்க்கிறேன். ஆண்டவருக்கு எதிரான என்னுடைய எண்ணங்கள், செயல்கள், வார்த்தைகள் எல்லாம் என்னுடைய முதுகின்     மேல் உள்ள பெரிய சுமையாக இருக்கிறது. என் இருதயத்தில் ஒரு கறையாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு என்னுடைய பாவங்களுக்காக மரித்தார் என்ற நினைவு என் இருதயத்தை துக்கத்தால் உடைக்கிறது.

நான் கண்ணீரோடு என் பாவங்களை ஆண்டவர் இயேசுவிடம் சொல்லி மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய நொறுங்கின இருதயத்தை அவர் பார்த்து சந்தோஷமாக  என் பாவங்களை மன்னிக்கிறார்.

 பைபிளில் வாசிக்கிறேன்: நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து நம்மை சுத்தமாக்க இயேசு உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்.” 1 யோவான் 1:9

என்னுடைய இருதயம் சந்தோஷத்தால் நிரம்புகிறது. ஆண்டவர் என் பாவத்தை மன்னித்து விட்டார். மலை போன்ற பெரிதான என் பாவங்களை என்னை விட்டு விலக்கினார். நான் என் கரை போக சுத்தமாக கழுவப்பட்டேன்.

இப்பொழுது நான் ஒரு புது மனிதன். நான் இனிமேல் பாவம் செய்வதை வெறுக்கிறேன். ஆண்டவர் இயேசுவுக்காக வாழ விரும்புகிறேன். அவரிடம் என் வாழ்க்கையை ஒப்பு கொடுத்து விட்டேன். புது வாழ்வு பெற்று கொண்டேன்.

முன்பு நான் வழி பட்டு வந்த கடவுள்களையும், உலக காரியங்களையும் விட்டு விட்டேன். ஆண்டவர் இயேசுவை தவிர நான் நம்பி வந்த ஒன்றும் என்னை காப்பாற்ற முடியாது என்று அறிந்து கொண்டேன். ஆண்டவர் இயேசுவை மட்டும் வணங்க, வழிபட நான் ஆசை படுகிறேன்.

நான் மரிக்கும் போது பரலோகத்தில் என் இயேசுவோடு எப்பொழுதும் வாழ்வேன் என்று அவர் உறுதி கூறியிருக்கிறார். ஏனெனில் என் பாவங்கள் யாவும் போய் விட்டன. நான் அவர் சமூகத்தில் சுத்தமாய் கரையற்றவனாய் இருக்கிறேன்.

ஜெபம்: “என்னை இரட்சித்து புது வாழ்வு தந்த ஆண்டவர் இயேசுவே, உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்

Leave a Reply

Your email address will not be published.