ஆண்டவர் இயேசுவோடு நாம் எடுக்கும் முதலடிகள்

ஆண்டவர் இயேசுவோடு நாம் எடுக்கும் முதலடிகள்

– Translated by Neeta Rajkumar

அன்பான நண்பரே,

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உங்கள் இருதயத்தையும், வாழ்க்கையையும் கொடுப்பதாக நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானத்திற்காக சந்தோஷப்படுகிறேன். பெரும் மகிழ்ச்சி கொடுக்கும் பிரயாணம் உங்களுக்கு முன்பாக இருக்கிறது. நான் என் ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை பல வருடங்களாக பின்பற்றி வருகிறேன். அவரை உண்மையுள்ள, அன்பான கடவுளாகவும், இரக்கமுள்ள, கருணையுள்ள நண்பராகவும் கண்டு கொண்டிருக்கிறேன்.

நான் அவருடைய பாதத்தில் உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளை கேட்கும் போதும், அவர் எனக்காக குறித்து வைத்த என் வாழ்க்கை அநுபவங்களை நான் அவருடன் அனுபவிக்கும் போதும், அனேக காரியங்களை அவர் எனக்கு கற்று கொடுக்கிறார்.

இந்த பாடங்கள் ஆண்டவரோடு எனக்கிருக்கிற தொடர்பிலிருந்து வந்திருக்கின்றன. ஆண்டவராகிய இயேசுவோடு நீங்கள் இந்த முதலடிகள் எடுக்கும் போது நீங்களும் இந்த செய்திகளில் உள்ள சந்தோஷத்திற்கு உள்ளாக உங்களை கரம் பிடித்து அழைத்து செல்ல விரும்புகிறேன்.

வாருங்கள், நாம் போவோம்.

தேவனை துதியுங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்” – ஏசாயா 12: 4

  முதலடி1: ஆண்டவர் இயேசு என் ரட்சகர்

  ஒரு நாள் நான் ஆண்டவர் இயேசுவிடம், “ஆண்டவர் இயேசுவே, உம்மை என்னுடைய  ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்று கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கைக்கு நீர் ஆண்டவராக இருக்க வேண்டும்” என்று வேண்டினேன். நான் போய் கொண்டிருந்த வழியை விட்டு திரும்பி ஆண்டவர் இயேசுவை பின்பற்ற ஆரம்பித்தேன். எதற்காக ஆண்டவர் இயேசுவை நான் பின்பற்ற வேண்டும்? ஏனெனில் அவர் என்னுடைய ரட்சகர். ரட்சகர் என்றால் பாவங்களில் இருந்து விடுவிக்கிறவர்.  நான் பாவத்தில் மூழ்கும் சமயத்தில் என்னை காப்பற்றினவர் என் ரட்சகர். தேவனுடைய Read More …

  முதலடி 2: ஆண்டவராகிய இயேசு கொடுக்கும் மன்னிப்பு, புது வாழ்வு

  ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்து என்னுடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டார் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என்னுடைய பாவ வாழ்க்கையை நினைத்து பார்க்கிறேன். ஆண்டவருக்கு எதிரான என்னுடைய எண்ணங்கள், செயல்கள், வார்த்தைகள் எல்லாம் என்னுடைய முதுகின்     மேல் உள்ள பெரிய சுமையாக இருக்கிறது. என் இருதயத்தில் ஒரு கறையாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு என்னுடைய பாவங்களுக்காக மரித்தார் என்ற நினைவு என் இருதயத்தை துக்கத்தால் உடைக்கிறது. நான் கண்ணீரோடு என் Read More …

  முதலடி 3: ஆண்டவராகிய இயேசு இல்லாத இருளில் தொலைந்த வாழ்க்கை

  ஆண்டவர் இயேசுவை அறியாதிருந்த போது என்னுடைய வாழ்க்கையை என் விருப்பபடி வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கு வரவிருக்கிற காரியங்களை பற்றியும், வாழ்க்கையின் திட்டங்கள் சரியாக இருக்குமோ என்பதை பற்றியும் எனக்கு தெரியவில்லை. ஏதோ இருளான காட்டில் வழி தெரியாதபடி இடறி கொண்டிருக்கிறதை போல இருந்தேன். பாதை தெரியவில்லை. எங்கே போகிறேன் என்பதும் தெரியவில்லை. பல பெரிய திட்டங்கள் போட்டேன். ஆனால் அவைகள் என்னை தவறான பாதையில் கொண்டு சென்றன. சில சமயங்ளில் என்னுடைய வழி நன்றாக இருந்ததால்  சந்தோஷப்பட்டேன். Read More …

  முதலடி 4: இருளில் இருந்து பிரகாசிக்கும் வெளிச்சத்துக்கு

  என் வாழ்க்கையில் இருளில் அலைந்த நான் நம்பிக்கை இல்லாமல் தடுமாறினேன். ஒரு நாள், அன்பான, கரிசனையான குரலை கேட்டேன். அது ஆண்டவர் இயேசுவின் குரல். “நானே உலகிற்கு வெளிச்சம். என்னை பின்பற்றி வா” என்று அவர் கூறினார். “ஒரு போதும் இருளில் இருக்க மாட்டாய். நான் உன் வாழ்க்கையை நடத்த உதவி செய்வேன்” என்றார். சந்தோஷத்தோடு அவர் அழைப்பை ஏற்று கொண்டேன். அவர் வெளிச்சத்தில் காலடி எடுத்து வைத்தேன். அவர் என்னை கரம் பிடித்து நடத்துகிறார். அவரை Read More …

  முதலடி 5: ஜெபம் – ஆண்டவரோடு பேசுதல்

  உன்னுடைய வாழ்க்கையில் ஆண்டவர்  இயேசுவை பின்பற்ற நீ தீர்மானித்து இருக்கிறாய். “எப்படி நான் ஆண்டவரிடம் ஜெபிக்கலாம்” என்று நீ நினைக்கலாம். ஆண்டவர் இயேசுவிடம் நாம் பேசுவதே ஜெபம். ஒவ்வொரு பாடத்திற்கு பின்பும் ஆண்டவரிடம் ஜெபிக்கும் ஜெபம் இருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்லும் போது நீ ஜெபிக்க ஆரம்பித்து விட்டாய். நான் வேறு வேறு வகையில் ஆண்டவர்  இயேசுவிடம் ஜெபிக்கிறேன். அவரை  நான் ஆராதிக்க நினைக்கும் பொழுது அமைதியான இடத்தையும், அமைதியான நேரத்தையும் கண்டு பிடித்து கொள்வேன். முழங்காலில் இருந்து, Read More …

  முதலடி 6: ஜெபம் – எப்படி ஜெபிப்பது?

  ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்களுக்கு எப்படி ஜெபிப்பது என்று சொல்லி கொடுத்தார்.  நீங்களும் கேட்டால் உங்களுக்கும் ஜெபிக்க கற்று கொடுப்பார். “ஆண்டவர் இயேசுவே, உம்மை ஆராதிக்கிறேன். உம்மை வணங்குகிறேன்! நீர்  என்னுடைய ஆண்டவர். சர்வ வல்லவர். என்னை காப்பாற்றுபவர். உம்மை துதிக்கிறேன். என் பேரில் நீர் வைத்திருக்கிற அதிசயமான அன்புக்காக நன்றி செலுத்துகிறேன்“ என்று நான் ஜெபிப்பேன். இயேசுவையும், அவருடைய அன்பையும் அறிந்து கொள்வதையும் குறித்து அவரிடம் கேட்ப்பேன். என் பாவங்களை மன்னிக்கும் படியும், நான் எப்படி Read More …

  முதலடி 7: பரிசுத்த வேதம் மூலம் ஆண்டவர் இயேசு நம்மோடு பேசுகிறார்

  நீங்கள் ஆண்டவரோடு பேசி, அவர் நீங்கள் பேசுவதை  கேட்கிறார் என்ற சந்தோஷத்தை பெற்றீர்களா? இப்பொழுது ஆண்டவர் இயேசு உங்களோடு பேசி உங்கள் ஜெபத்துக்கு பதில் கொடுக்க காத்திருக்கிறீர்கள? ஆண்டவர் நம்மிடம் எப்படி பேசுகிறார்? பைபிள் என்று அழைக்கபடும் கிறிஸ்தவ வேதத்தின் மூலமாக நம்மோடு பேசுகிறார். அதனால் வேதம் தேவனுடைய வார்த்தை என்று சொல்ல படுகிறது. வேதம் கிறிஸ்தவர்களுடைய பரிசுத்த வேத புத்தகம். ஏனென்றால் தேவன் சொல்லிய வார்த்தைகளை அவருடைய மக்கள் அதில் எழுதி உள்ளனர். வேதத்தில் இரண்டு Read More …

  முதலடி 8: தேவன் – நம்மை படைத்தவர்

  “தேவன் இவ்வளவாய் உலகத்தில் (நம் எல்லார் மேலும்) அன்பு கூர்ந்தார்” என்று யோவான் 3:16 இல் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. வேதத்தில் தேவன் தம்மை பற்றி, தம்முடைய அன்பை பற்றி என்ன சொல்கிறார்? முதலாவது வசனமானது ஆதியாகமம் 1:1: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” அவர் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார். மலைகளையும், ஆறுகளையும், சமுத்திரத்தையும் படைத்தார்.  மரம், செடி, கொடிகளையும், பூக்களையும், மிருகங்களையும், பறவைகளையும், பூமியிலுள்ள எல்லா உயிரினங்களையும் படைத்தார். இவ்வாறு படைக்கபட்ட உலகின் Read More …

  முதலடி 9: ஆதாம், ஏவாளின் வாழ்க்கை வரலாறு

  தேவன் படைத்த முதல் ஆண், பெண் ஆதாம் ஏவாள் ஆவார்கள். இவர்களுடைய வரலாறு வேதத்தில் முதல் புத்தகத்தில் இருக்கிறது.  தேவன் தம்மை போல அவர்களை படைத்தார்.  எதேன் என்ற அழகான தோட்டத்தில் அவர்களை வைத்தார். ஒவ்வொரு நாளும் தேவன் அவர்களோடு பேசவும் நடக்கவும் வந்தார். நம்மால் அதை நினைத்து பார்க்க முடியாது. வானத்தையும் பூமியையும் படைத்த எல்லாம் வல்ல தேவன் தாம் உருவாக்கிய மனிதனோடு உறவு கொள்ள விரும்பினார், ஏனெனில் அவருக்கு நாம் விசேஷமானவர்கள். ஆதாம், ஏவாள் Read More …

  முதலடி 10: தேவன் நம் மேல் வைத்த அதிசய அன்பு

  ஆதாம்,ஏவாள் பாவம் செய்து தேவனோடு உள்ள உறவை இழந்தனர். ஆனால் தேவன் நம் மேல் வைத்த அதிகமான அன்பினால், பாவத்தைவெறுக்கிற அவர், நம்மை நேசிக்கிறார்.நாம் பாவம் செய்யாதபடி நம்மை காத்துக்கொள்ள முடியாது.பாவம்செய்வதால் தேவனோடு உள்ள நம் உறவு முறிந்து  விடுகிறது.மறுபடியும் நம்மை தம்மிடம் சேர்த்துக்கொள்ள விரும்பி,அவருடைய ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவை பாவம் நிறைந்த இந்த உலகைதிற்கு அனுப்பினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்ததினால் நம்முடைய பாவதிற்குரிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார். இத்தனை  பெரிய Read More …

  முதலடி 11: கிறிஸ்மஸ் – தேவன் தம் குமாரனை உலகிற்கு அனுப்பினார்.

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வேதத்தில் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது.  இது ஏசாயா என்ற தீர்க்கதரிசி மூலமாக பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லபட்டது.”இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகி ஒரு குமாரனை பெறுவாள் .அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாய்” என்று ஏசாயா 7:14 இல் வேதத்தில் சொல்ல பட்டிருகிறது.  இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.  நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்க, தேவனோடு நம்மை ஒன்று சேர்க்க தேவன் நமக்காக ஒரு ரட்சகரை அனுப்புவேன் Read More …

  முதலடி 12: கிறிஸ்மஸ் – தேவன் நம்மோடிருக்க வந்தார்

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறக்கும் நேரம் வந்த போது மரியாளும், யோசேப்பும் பெத்லேகேம் என்ற ஊரில் இருந்தனர். வழி போக்கர் தங்கும் இடமாகிய சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லை. அதனால் ஆடு, மாடுகள் இருக்க கூடிய தொழுவத்தில் தங்கினார்கள். அங்கு தான் இயேசு பாலகன் பிறந்தார். அங்கு ஆடு மாடுகளுக்கு தீனி வைக்க இருந்த பெட்டியில் மரியாள் குழந்தையை துணியில் சுற்றி படுக்க வைத்தாள். நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்ய தேவனுடைய மகன் பாவமான உலகத்தில் அவதரித்தார். பாவத்தோடு Read More …

  முதலடி 13: அற்புதங்களை செய்யும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

  முப்பது வயதாக இருக்கும் பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஊழியம் செய்ய வீட்டை விட்டு வெளியேறினார். நாமும் அவருடைய சீடர்களாக அவர் போகிற இடத்திற்கு போகவும், அவர் சொல்வதை கேட்கவும், அவர் செய்வதை பார்க்கவும் செல்வோமா? இது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதோ அப்படியே உனக்கும் நிச்சயமாக இருக்கும். இயேசுவானவர் எல்லா ஊர்களுக்கும் சென்று தேவனுடைய ராஜ்யத்தை பற்றி கூறினார்.  எல்லா மனிதர் மேலும் இரக்கம் காட்டினார். சுகவீன பட்டவர்களை, குஷ்டரோகிகளை, கண் பார்வையற்றவர்களை, பேச முடியாதவர்களை, Read More …

  முதலடி 14: இயேசு ஐயரின் பாதத்தில் அமர்ந்திருத்தல்

  ஆண்டவரும், நம் எஜமானனுமாகிய இயேசுவோடு நம் பயணத்தை தொடர ஆசையா? அப்படியானால் வாருங்கள் போவோம். இயேசு செய்த அனேக அற்புதங்களை பார்த்தோம். இப்பொழுது அவர் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்போம். இயேசுவுடைய போதனைகளை கேட்க அநேகர் அவரிடம் வந்தனர். தேவனை பற்றியும் தன்னை பற்றியும் உள்ள எல்லா உண்மைகளையும் அவர்களுக்கு கூறினார். ‘உவமைகள்’ என்று சொல்லப்படும் கதைகள் மூலம் சாதாரணமான மக்கள் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதாக சத்தியங்களை போதித்தார். தானும் பிதாவும் ஒருவரே என்பதையும் இருவரும் Read More …

  முதலடி 15: ஆண்டவராகிய இயேசு சிலுவையில் நம் பாவத்திற்காக

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் ரட்சகர்! அவர் உலகத்திற்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றும் நேரம் வந்தது. அவர் பாவிகளாகிய நம்மை மீட்க்க இவ்வுலகத்திற்கு வந்தார். தம்முடைய சீஷர்களிடம் தாம் மரிக்க போவதை பற்றி கூறினார். அவர்கள் அதை கேட்டு மிகுந்த சஞ்சலம் அடைந்தார்கள். ஆனால் “மூன்றாம் நாள் நான் உயிரோடு எழுந்து வருவேன்” என்ற சந்தோஷ செய்தியை அவர்களுக்கு அறிவித்தார். மக்களின் பாவங்களை மன்னிப்பேன் என்று அவர் கூற கேட்ட மத தலைவர்கள் அவர் மேல் கோபப்பட்டனர். Read More …

  முதலடி 16: ஆண்டவர் இயேசு – உயிர்தெழுந்த ரட்சகர்

  ஆண்டவர் இயேசுவின் சீஷர்கள் தங்களின் எஜமான் சிலுவையில் அடைந்த கொடூரமான மரணத்தை கண்டனர். அவர் தங்களோடு இல்லாததால் பயத்தோடும், தனிமை உணர்வோடும் இருந்தனர். இயேசு மரித்து மூன்றாம் நாள் சீடர்களில் ஒரு சிலர் கல்லறைக்கு சென்று ஆச்சரியமான நிகழ்வை கண்டனர். கல்லறை வாசலில் தேவ தூதன் ஒருவர் நின்று சீடர்களிடம் வெற்றிகரமாக, “ஆண்டவர் இயேசு இங்கே இல்லை, அவர் சொன்ன படியே உயிர்தெழுந்தார்!” என்றார். சீடர்களின் துக்கம் சந்தோஷமாக மாறியது! அவர்களின் ஐயர் இயேசு உயிரோடு இருக்கிறார்! Read More …

  முதலடி 17 : பரிசுத்த ஆவியானவராகிய தேவன்

  யார் இந்த பரிசுத்த ஆவியானவர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆண்டவர் இயேசு சிலுவையில் மரிக்கும் முன்பு தான் மரித்து, உயிரோடு எழுந்து,மறுபடியும் தன் பிதாவினிடத்திற்கு போவதாக கூறினார். இதை கேட்ட சீடர்கள்   இதயம் துக்கத்தால் நிறைந்தது. அவர்களை தேற்றி இயேசு கூறியது என்னவென்றால் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. என்னுடைய பிதா என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்   படியாக ஆலோசகரை கொடுப்பார். ஆலோசனை கொடுக்கிற பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் குறித்து உங்களுக்கு சொல்லி கொடுப்பார்” என்றார். இயேசு மரித்து உயிரோடு Read More …

  முதலடி 18: தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் – நம் உதவியாளர், வழி காட்டுபவர்

  சிலுவை மரணத்தை சந்திக்கும் முன்னர் ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்களுக்கு பின் வருமாறு கூறினார் “சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” யோவான் 16:13 ஆண்டவர் இயேசு பரலோகத்திற்கு சென்ற பின் அவருடைய சீடர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். பரிசுத்த ஆவியை பெற்று கொண்ட பின், சீடர்களுக்கு ஆண்டவர் யேசுவுக்காக வாழ கூடிய தைரியமும், ஞானமும் இயேசுவை பற்றி உலகத்தின் மக்களுக்கு கூற தைரியமும் வந்தது. பரிசுத்த ஆவியானவர் நமக்கு எப்படி Read More …

  முதலடி 19: மோட்சமாகிய பரலோகம் – நம்முடைய நித்திய வீடு

  பரலோகம்! பரலோகத்தை நினைக்கும் பொழுதே நான் சந்தோஷமாக பாடும் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. “பரலோகம் இன்ப நாடு, மகிமை, கிருபை நிறைந்த நாடு; என் மீட்பர் முகத்தை நான் அங்கு தரிசிப்பேன், பரலோகமாகிய இன்ப நாட்டில்” பரலோகம் ஆண்டவரின் மகிமையால் நிறைந்திருக்கும் இடம். ஒரு அழகான இடம்.  அதை இயேசு “என் பிதாவின் வீடு” என்று கூறினார். நம்முடைய அறிவுக்கு எட்டாத வகையில் அவருடைய பிள்ளைகளான நாம் பரலோகத்தில் பிதாவோடும் இயேசுவோடும் இருப்போம். இரவும், பகலும் Read More …

  முதலடி 20: மோட்சம் – நாம் ஆண்டவர் வீட்டுக்கு செல்லுதல்

  உலகிலுள்ள எல்லா மார்க்கத்தினரும் மோட்சமாகிய பரலோகத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். பரலோகம் அருமையான இடம் என்பது அவர்களுக்கு தெரியும். நல்ல கிரியைகளான ஏழைகளுக்கு இரக்கம் காட்டுதல், தேவையுள்ளவர்களுக்கு உதவுதல் போன்ற காரியங்களை செய்து அதன் மூலம் பரலோகத்திற்கு செல்ல முயற்சி செய்கிறார்கள். பரலோகத்திற்கு செல்ல அவர்களே வழியை உண்டாக்க பார்கிறார்கள். தங்களது நல்ல செயல்களை பார்த்து கடவுள் தங்கள் பாவங்களை கண்டு கொள்ளாமல் பரலோகத்தில் சேர்த்து கொள்வார் என்று எண்ணுகிறார்கள். இன்னும் அநேகர் தங்களை வெறுத்து, உபவாசம் பண்ணி, Read More …

  முதலடி 21: சாத்தான் – ஆண்டவருடைய பகைவன், நம் பகைவன்

  உலகத்திலுள்ள தீய சக்திகளை குறித்து நீ நினைத்தது உண்டா? அவைகள் எங்கிருந்து வருகிறது? யார் அதற்க்கு காரணம்? தவறான காரியங்கள் என்று அறிந்திருந்தும் அதிலே தொடரும் படியாகவும் அதை அனுபவிக்கும் படியாகவும் உனக்குள்ளே எழும்பும் சத்தத்தை கேட்டிருக்கிறாயா? வேதம் சொல்லுகிறது: தீமையான காரியங்கள் யாவற்றிற்கும் சாத்தானே காரணம்.  அவன் ஆண்டவரை எதிர்ப்பவன். மனிதர்கள் யாவரையும் ஆண்டவருக்கு கீழ்படியாமல் அவருக்கு விரோதமாக பாவம் செய்ய தூண்டுபவன். வேதத்தின் முதல் புத்தகத்திலேயே சாத்தானை குறித்து சொல்லபட்டிருக்கிறது. தேவனாகிய ஆண்டவர் ஆதாம், Read More …

  முதலடி 22: ஆண்டவராகிய இயேசு சாத்தானை ஜெயித்தவர்

  நம்மை சாத்தானின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க வந்த ஆண்டவர் இயேசுவை துதிக்கிறேன். இரட்சிக்கப்பட்ட நாம் ஆண்டவர் இயேசுவுக்கு சொந்தமானவர்கள். அவருடைய பராமரிப்புக்குள் இருக்கும் நாம் அவருடைய பிள்ளைகள். சாத்தான் தோற்கடிக்கப்பட்ட பகைவன். சாத்தான் இந்த உலகத்தையும் அதிலுள்ள மக்களையும் ஆளுகை செய்கிறான். வேதம் சாத்தானை பிசாசு என்றும் இந்த உலகத்தை ஆள்பவன் என்றும் சொல்லுகிறது. ஆண்டவர் சாத்தானை சிறிது காலம் இந்த உலகத்தில் விடுதலையாக விட்டிருக்கிறார். சீக்கிரத்தில் சாத்தானையும், அவனுடைய தூதர்களையும் அவர்களுக்காக ஏற்ப்படுத்தின நரகத்தில் தள்ளி Read More …

  முதலடி 23: ஆண்டவரை முழு இருதயத்தோடு நேசித்தல்

  கடவுள் கொடுத்த கட்டளைகளில் முக்கியமானது எது என்று ஒரு மனிதன் ஆண்டவர் இயேசுவை கேட்டான். அதற்க்கு அவர் மறு மொழியாக “தேவனிடத்தில் முழு இருதயதோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலனோடும் அன்பு கூற வேண்டும்” என்றார். இப்படி நான் எப்படி ஆண்டவரை அன்பு கூற முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அவருடைய வெளிச்சத்தை என் இருதயத்தில் தந்து எனக்கு புரிய வைத்தார். நான் முழுமையாக அவரை அன்பு கூறுவதையும் முழுமையாக என்னை Read More …

  முதலடி 24: ஆண்டவரை நேசித்தல், பாவத்தை வெறுத்தல்

  பாவம் என்பது என்ன? ஆண்டவர் யேசுவிடம் வரும் வரை நான் பாவத்தை பற்றி இப்படி நினைத்திருந்தேன்: ஒரு சிறு பொருளை திருடினால் அது ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போன்ற பெரிய பாவம் அல்ல. நான் வெறுக்கும் சிலருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் நான் அவர்களுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. மற்ற குற்றவாளிகளை போல நான் சிறையில் இல்லை. அதனால் நான் ஒரு நல்லவன் என்று நினைத்து கொள்வேன். நான் பாவி அல்ல, Read More …

  முதலடி 25: இரட்சிப்பை தொடர்ந்து நற்கிரியைகள்

  அன்பான சிநேகிதரே, அமைதியாக நாம் அமர்ந்து ஆண்டவர் அதிசயமாக இலவசமாய் அளித்திருக்கும்  இரட்சிப்பை பற்றியும், நித்திய ஜீவனை கொடுப்பேன் என்ற உறுதி மொழியையும் நினைத்து பார்ப்போம். இரட்சிப்பு,  விடுதலை, இலவசமாக ஆண்டவர் தருவது. நாம் செய்யும் கிரியைகளுக்கு பரிசாகவோ, அல்லது தியாகத்தாலோ இரட்சிப்பு பெற முடியாது. ஆண்டவர் கொடுக்கும் இரட்சிப்புக்கு நாம் பதில் ஒன்றும் செய்ய முடியாது. அல்லது அதை சம்பாதிக்கவும் முடியாது. அது தகுதியற்றவர்களுக்கு கொடுக்கப்படும் வெகுமதி. இயேசுவின் அன்பால் பாவிகளாகிய நமக்கு அவர் கொடுப்பது. Read More …

  முதலடி 26: ஆலயத்தில் தேவனை தொழுது கொள்ளுதல்

  இன்று ஒரு ஞாயிற்று கிழமை. நான் மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஆண்டவரை ஆராதிக்க ஆலயத்திற்கு செல்கிறேன். நீயும் என்னோடு வர விரும்புவது எனக்கு மிக சந்தோசம். ஏன் கிறிஸ்தவர்கள் ஞாயிற்று கிழமை ஆலயதிற்கு செல்லுகிறார்கள்? வாரத்தின் முதல் நாள் ஞாயிற்று கிழமை ஆண்டவர் இயேசு கல்லறையில் இருந்து உயிரோடு எழுந்தார். உலகிலுள்ள அணைத்து கிறிஸ்தவர்களும் ஞாயிற்று கிழமை ஆண்டவரை ஆராதிக்கவும் நன்றி செலுத்தவும் அவருக்கு துதி செலுத்தவும் ஆலயத்தில் கூடுகிறார்கள். ஞாயிற்று கிழமை ஆண்டவருடைய நாள் என்று Read More …

  முதலடி 27: ஆலயம் – உலகத்தில் நம்முடைய கிறிஸ்தவ குடும்பம்

  இன்று மற்றும் ஒரு ஆலயத்திற்கு செல்லலாம் வாருங்கள். இப்பொழுது நாம் ஒரு வீட்டின்     முன்னால் நிற்கிறோம். இது ஆலய கட்டிடம் இல்லை. உள்ளே போகலாமா? முன் அறையில் ஒரு சில குடும்பங்கள் கூடி இருக்கின்றனர். நம்மை மனமுவந்து வரவேற்கிறார்கள். ஆராதனை துவங்குகிறது. பாடும் பொழுது நம்மோடு இசைக்க வாத்திய கருவி இல்லை. ஆனால் இருதயத்திலிருந்து இனிமையாக பாடல் பாடுகிறோம். மற்ற ஆலயத்தை போல் இங்கும் ஜெபித்து, வேதம் வாசித்து, போதனை கொடுக்க ஒரு தலைவர் இருக்கிறார். ஆராதனை Read More …

  முதலடி 28: ஆண்டவராகிய இயேசு திரும்பவும் வருகிறார்

  ஆண்டவர் இயேசு உயிரோடு இருக்கிறார்! அவருடைய சீடர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு    இருந்தனர். இயேசு நாற்பது நாட்கள் வரை அவர்களோடு இருந்து அவருடைய ராஜ்யத்தை குறித்து அவர்களுக்கு கூறினார். சீடர்களை விட்டு அவர் பரலோகமாகிய மோட்சம் செல்லும் நேரம் வந்தது. அவர்கள் பார்த்து கொண்டுருக்கும் பொழுதே மோட்சத்துக்கு சென்றார். மேகம் அவரை மறைத்து விட்டது. அப்போது இயேசு போவதை பார்த்து கொண்டிருந்த சீடர்களுக்கு முன் வெண்ணிற ஆடை  அணிந்த இரண்டு தேவ தூதர்கள் தோன்றினார். “வானத்தை ஏன் அண்ணாந்து Read More …

  முதலடி 29: ஆண்டவர் இயேசு மாத்திரமே கடவுளை சேர ஒரே வழி

  அன்பான நண்பரே, நீங்கள் இப்படி யோசிக்கிறீர்களா: கிறிஸ்த்தவர்கள் கோருவதைப் போல ஆண்டவர் இயேசு மாத்திரமே கடவுளை சேர ஒரே வழியா? அப்படியானால் உலகிலுள்ள எல்லா மதங்களும் எப்படி? அவைகள் எல்லாம் கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்காதா? உண்மையை கண்டு பிடித்த என் நண்பர் ரவியை நீங்கள் சந்திக்க விரும்புகிறேன்.அவர் உங்களுக்கு தன் வரலாறை சொல்ல போகிறார். ரவி: நான் ஒரு கல்லூரி பட்டம் மற்றும் ஒரு நல்ல வேலை உள்ள ஒரு இளைஞன்.ஆனால் நான் மன அமைதியற்று Read More …

  முதலடி 30: சாட்சி – நான் முழு உலகத்திற்கும் கூற விரும்புவது

  தேவன் அன்பானவர். அவருடைய அன்பு ஆண்டவர் இயேசுவின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதிற்கும் இந்த சந்தோஷமான செய்தியை நான் கூற விரும்புகிறேன். நாம் வாசித்த பாடங்களை திருப்பி பார்க்கிறேன். நான் என்னை அர்ப்பணித்து ஆண்டவரை பின்பற்றுவேன் என்று முடிவெடுத்த பின், ஆண்டவர் இயேசு கொடுக்கும் ஆச்சரியமான வாழ்வை எண்ணி பார்கிறேன். ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் என்னுடைய இருதயம் பாவத்தில் கரை பட்டு இருக்கும். அவர் இருப்பதால் என்னுடைய இருதயம் கழுவப்பட்டு சுத்தமாக இருக்கிறது. Read More …

  முதலடி 31: அன்பான நண்பனே, உனக்காக என் ஜெபம்

  இந்த அருமையான  வேத பாடங்கள் வழியாக நாம் ஒன்றாக இருந்து ஆண்டவர் இயேசுவின் பின் முதல் அடிகள் எடுத்து வைத்து நம் புது வாழ்வை துவங்கி இருக்கிறோம். நாம் இருவரும் ஒன்றாக ஆண்டவரை பின்பற்றி சென்ற இந்த பிரயாணம் எனக்கு இருந்தது போலவே உனக்கும் பரவசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு அன்பான ரட்சகராக இருப்பது  போலவே உனக்கும் இருக்க ஜெபிக்கிறேன். இந்த பாடலின் வரிகள் இவ்வாறாக நாம் ஆண்டவரோடு நடப்பதன் மகிழ்ச்சியை Read More …