முதலடி 3: ஆண்டவராகிய இயேசு இல்லாத இருளில் தொலைந்த வாழ்க்கை

ஆண்டவர் இயேசுவை அறியாதிருந்த போது என்னுடைய வாழ்க்கையை என் விருப்பபடி வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கு வரவிருக்கிற காரியங்களை பற்றியும், வாழ்க்கையின் திட்டங்கள் சரியாக இருக்குமோ என்பதை பற்றியும் எனக்கு தெரியவில்லை.

ஏதோ இருளான காட்டில் வழி தெரியாதபடி இடறி கொண்டிருக்கிறதை போல இருந்தேன். பாதை தெரியவில்லை. எங்கே போகிறேன் என்பதும் தெரியவில்லை.

பல பெரிய திட்டங்கள் போட்டேன். ஆனால் அவைகள் என்னை தவறான பாதையில் கொண்டு சென்றன. சில சமயங்ளில் என்னுடைய வழி நன்றாக இருந்ததால்  சந்தோஷப்பட்டேன். திடீரென்று பெரிதான பிரச்சனை வரும் போது பெரிய குழி ஒன்றில் விழுந்து வெளியே வர தெரியாதவனாக இருந்தேன். வாழ்க்கையின் பாதை கடினமாக தோன்றும் போது ஒவ்வொரு நாளும் சோர்ந்து, கலங்கி போவேன்.

என்னுடைய வாழ்க்கை என்னை எங்கு கொண்டு செல்கிறது என்பது அறியாமல் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் கலங்கினேன். இருளுக்குள் தொலைந்து போனவனாக உணர்ந்தேன்.  வாழ்க்கை அர்த்தம் காணாமல் அடிக்கடி சோர்ந்து போய் எனக்கு உதவி செய்ய யாரும் உண்டா என்று தவித்தேன்.

நண்பனே, உன்னுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட நேரம் வந்தது உண்டா? பயத்தினால் சோர்ந்து போகாதே. உனக்கு உதவிட ஒருவர் இருக்கிறார். அவர் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரிடம் ஓடி வா.

வேதம் கூறுகிறது உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளியான இயேசு” யோவான் 1:9.

ஜெபம்:ஆண்டவராகிய இயேசுவே, இருளில் இருக்கிற என்னை வெளிச்சமாகிய உம்மிடம் சேர்த்து கொள்ளும். ஆமென்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *