முதலடி 19: மோட்சமாகிய பரலோகம் – நம்முடைய நித்திய வீடு

பரலோகம்! பரலோகத்தை நினைக்கும் பொழுதே நான் சந்தோஷமாக பாடும் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது.

“பரலோகம் இன்ப நாடு, மகிமை, கிருபை நிறைந்த நாடு;

என் மீட்பர் முகத்தை நான் அங்கு தரிசிப்பேன்,

பரலோகமாகிய இன்ப நாட்டில்”

பரலோகம் ஆண்டவரின் மகிமையால் நிறைந்திருக்கும் இடம். ஒரு அழகான இடம்.  அதை இயேசு “என் பிதாவின் வீடு” என்று கூறினார்.

நம்முடைய அறிவுக்கு எட்டாத வகையில் அவருடைய பிள்ளைகளான நாம் பரலோகத்தில் பிதாவோடும் இயேசுவோடும் இருப்போம். இரவும், பகலும் கோடான கோடி தேவ தூதர்கள் அவருடைய புகழை பாடி ஆராதிக்கிறார்கள். இது பார்ப்பதற்கு ஒரு வியக்கதக்க காட்சி ஆகும்.

அங்கு துக்கமும், வேதனைகளும் இல்லை என்று ஆண்டவர் கூறுகிறார். நம்முடைய கண்ணீர் யாவும் அவர் துடைப்பார். உலகில் நாம் பட்ட பாடுகளுக்கு ஈடு கட்டும் வகையில் ஆண்டவர் நம்மை தேற்றுவார்.

ஆண்டவர் இயேசுவை நம்பி வாழ்ந்து, மரித்து, நம்மை விட்டு போன நமக்கு அருமையானவர்களை பரலோகத்தில் காண்போம். இந்த நிச்சயம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு எவ்வளவு பெரிய பாக்கியம்!

வேதம் கூறுகிறது “ஆண்டவர் நமக்கு ஆயத்தம் பண்ணி வைதிருக்கிரவைகளை கண்கள் காணவில்லை, காதுகள் கேட்கவில்லை , ஒருவனும் அதை எண்ணி பார்க்க முடியாது!” கொரிந்தியர் 2:9

ஒரு நாள் நான் பரலோகத்திற்கு போவேன் என்கிற காட்சியை அடிக்கடி எண்ணி பார்த்து கொள்வேன். ஆண்டவர் இயேசு என் கரத்தை பிடித்து பிதாவாகிய தேவனிடத்தில் என்னை கூட்டி செல்வார். ஒரு நாள் நிச்சயம் அது நடக்கும். ஆண்டவர் இயேசு மாத்திரமே என்னை தேவனிடம் சேர்க்க வல்லவர்.

ஜெபம்: “உம்மோடு பரலோகத்தில் இருக்கும் படியாக ஒரு இடத்தை எனக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிற ஆண்டவராகிய இயேசுவே, உமக்கு மகா சந்தோஷத்தோடு நன்றி செலுத்துகிறேன். ஆமென்”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *