முதலடி 7: பரிசுத்த வேதம் மூலம் ஆண்டவர் இயேசு நம்மோடு பேசுகிறார்

நீங்கள் ஆண்டவரோடு பேசி, அவர் நீங்கள் பேசுவதை  கேட்கிறார் என்ற சந்தோஷத்தை பெற்றீர்களா? இப்பொழுது ஆண்டவர் இயேசு உங்களோடு பேசி உங்கள் ஜெபத்துக்கு பதில் கொடுக்க காத்திருக்கிறீர்கள?

ஆண்டவர் நம்மிடம் எப்படி பேசுகிறார்? பைபிள் என்று அழைக்கபடும் கிறிஸ்தவ வேதத்தின் மூலமாக நம்மோடு பேசுகிறார். அதனால் வேதம் தேவனுடைய வார்த்தை என்று சொல்ல படுகிறது.

வேதம் கிறிஸ்தவர்களுடைய பரிசுத்த வேத புத்தகம். ஏனென்றால் தேவன் சொல்லிய வார்த்தைகளை அவருடைய மக்கள் அதில் எழுதி உள்ளனர். வேதத்தில் இரண்டு பாகங்கள் இருக்கிறது. முதல் பாகம் பழைய ஏற்பாடு, இரண்டாம் பாகம் புதிய ஏற்பாடு ஆகும்.

பழைய ஏற்பாட்டில் தேவன் வானத்தையும், பூமியையும் எல்லா ஜீவன்களையும் படைத்தார் என்று வாசிக்கிறோம். தேவன் எவ்வாறு யூத மக்களை ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு ஆயத்தபடுத்தினார் என்பதை குறித்தும் சொல்ல பட்டிருக்கிறது.

புதிய ஏற்பாட்டில் முதல் நான்கு புத்தகங்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவை சுவிசேஷங்கள் எனப்படும். சுவிசேஷம் என்பது ஆண்டவர் இயேசுவை பற்றிய நல்ல செய்தி. ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையும் அவருடைய போதனைகளும் அதில் எழுதப்பட்டு இருக்கிறது.

புதிய ஏற்பாட்டில் மற்ற புத்தகங்களில் இயேசுவுடைய சீடர்களை பற்றியும் அவர்கள் எப்படி ஜீவிக்க வேண்டும் என்பதையும் பற்றி வாசிக்கிறோம். ஆண்டவர் இயேசுவை பின்பற்றுபவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும், விசுவாசிகள் என்றும் அழைக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் இயேசுவை பாவத்திலிருந்து விடுவிக்கிற ரட்சகர் என்று நம்புகின்றனர்.

தனியாக நேரத்தை ஒதுக்கி ஜெபியுங்கள். கண்களை மூடி ஆண்டவர்  இயேசுவிடம் வேதத்தை புரிந்து கொள்ள உதவி  செய்யும்படி கேட்டு வேதத்தை வாசியுங்கள். புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்களில் இருந்து வாசிக்க ஆரம்பியுங்கள்.  அப்பொழுது தேவனுடைய வெளிச்சம் உங்கள் இருதயத்தில் பிரகாசிக்கும். வேதத்தில்    கூறியிருக்கும் சத்தியங்களை அறிந்து கொள்வீர்கள்.

ஆண்டவர் இயேசு வேதத்தின் மூலம் நீங்கள் நடக்க வேண்டிய வழியை உங்களுக்கு காண்பிப்பார். அனேக வாக்குததங்களை கொடுப்பார்.  வேதத்தை வாசிக்க, வாசிக்க அதில் உள்ள மகத்தான புதயல்களான சமாதானம், சந்தோசம், ஆறுதல், நிச்சயம், வழிகாட்டுதல், பாதுகாப்பு ஆகியவற்றை பெற்று கொள்ளுவீர்கள்.

ஜெபம்: “ஆண்டவர் இயேசுவே, உம்முடைய பரிசுத்த வேதத்தின் மூலம் என்னிடம் பேசி என்னை வழி நடத்தும். ஆமென்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *