முதலடி 11: கிறிஸ்மஸ் – தேவன் தம் குமாரனை உலகிற்கு அனுப்பினார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வேதத்தில் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது.  இது ஏசாயா என்ற தீர்க்கதரிசி மூலமாக பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லபட்டது.”இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகி ஒரு குமாரனை பெறுவாள் .அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாய்என்று ஏசாயா 7:14 இல் வேதத்தில் சொல்ல பட்டிருகிறது.  இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.  நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்க, தேவனோடு நம்மை ஒன்று சேர்க்க தேவன் நமக்காக ஒரு ரட்சகரை அனுப்புவேன் என்று வாக்குத்தத்தம் பண்ணினதை நாம் வேதத்தில் காணலாம்.

தேவதூதர் மூலமாக நீ ஒரு குமாரனை  பெறுவாய்.  அவர் உன்னதமான தேவனுடைய குமரன் என்னபடுவர்என்று  மரியாள் என்ற ஒரு கன்னி பெண்ணுக்கு சொல்லபட்டது. மரியாள் அற்புதமாக தேவனால் கற்பம் தரித்தாள். அந்த நேரத்தில் மரியாள் யோசேப்பு என்ற தச்சு வேலை செய்து வந்த வாலிபனுக்கு திருமணத்திற்கு நிச்சயிகப்பட்டு இருந்தாள். தேவன் யோசேப்பிடம் மரியாள் பரிசுத்தமானவள் என்று தேவதூதர் மூலமாக சொன்ன பொது யோசேப்பு கீழ்படிந்து அவளை ஏற்றுக்கொண்டார்.

பிறக்கும் பிள்ளைக்கு “இயேசு” என்று பேரிடும்படி தேவதூதன் கூறினார். “இயேசு” என்பதற்கு “ஜனங்களின் பாவங்களை நீக்கி ரட்சிப்பவர் என்று அர்த்தம் ஆகும். பரிசுத்தமான தேவ குமாரன் இயேசு பரலோகத்தின் மகிமையை விட்டு நம்மை பாவத்தில் இருந்து விடுதலை செய்ய பாவமான இந்த உலகில் சிறு குழந்தையாக பிறந்தார். இது எவ்வள்ளவு ஆச்சரியம்! நம்மால் இதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆம், தேவன் வந்தார்!
அடுத்து வரும் பகுதியில் இயேசு கிறிஸ்துவின் அருமையான பிறப்பை பற்றி விவரமாக பார்போம்.

ஜெபம்: “எல்லாம் வல்ல தேவனே, பாவங்களிலிருந்து எங்களை விடுதலை செய்ய உம்முடைய ஒரே மகனை இந்த உலகிற்கு அனுப்பின உம்முடைய ஆச்சரியமான திட்டத்திற்காக நன்றி செலுத்துகிறேன். ஆமேன்.”

Leave a Reply

Your email address will not be published.