முதலடி 29: ஆண்டவர் இயேசு மாத்திரமே கடவுளை சேர ஒரே வழி

அன்பான நண்பரே, நீங்கள் இப்படி யோசிக்கிறீர்களா: கிறிஸ்த்தவர்கள் கோருவதைப் போல ஆண்டவர் இயேசு மாத்திரமே கடவுளை சேர ஒரே வழியா? அப்படியானால் உலகிலுள்ள எல்லா மதங்களும் எப்படி? அவைகள் எல்லாம் கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்காதா?

உண்மையை கண்டு பிடித்த என் நண்பர் ரவியை நீங்கள் சந்திக்க விரும்புகிறேன்.அவர் உங்களுக்கு தன் வரலாறை சொல்ல போகிறார்.

ரவி: நான் ஒரு கல்லூரி பட்டம் மற்றும் ஒரு நல்ல வேலை உள்ள ஒரு இளைஞன்.ஆனால் நான் மன அமைதியற்று இருந்தேன். என் வாழ்க்கையில் ஏதோ ஒன்று இல்லாமல் இருந்தது. கடவுளுக்காக ஒரு ஆழமான ஆசை என் மனதில் உண்டாயிற்று. நான் “கடவுள் இருக்கிறார், அவர் உன்னதமானவர், இந்த பிரபஞ்சத்தை ஆளுபவர்” என்று நம்பினேன். ஆனால் நான் அவரை எப்படி கண்டுபிடிப்பது, எப்படி அவரிடம் சேருவது என்று அறியாமல் திகைத்தேன்.

என் குடும்பத்தின் மதத்தில் கடவுளை தேட துவங்கினேன். வீட்டிலும் கோவிலிலும் எல்லா சமய சடங்குகளையும் செய்தேன், ஏழைகளுக்கு தருமம் செய்தேன், நோன்பு இருந்து பிரார்த்தனை பண்ணினேன். ஆனால் என்னால் கடவுளை நெருங்க முடிய வில்லை. ஒரு ஆழமான படுகுழி என்னை கடவுளிடம் இருந்து பிரிப்பதாக நான் உணர்ந்தேன்.

நான் மற்ற மதங்களை சுற்றிப் பார்த்தேன். ஒவ்வொரு மதத்திலும் கடவுளை தேடும் பாதை படுகுழி அருகே வந்து நின்று விட்டது! “நான் எப்படி இந்த பெரிய பாளத்தை கடந்து தேவனை சேர முடியும்?” என்று கலங்கினேன்.

ஒரு நாள் நான் ஒரு செய்தியை கேட்டேன்: எனக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் படுகுழி என் பாவங்களே என்று. கடவுள் பரிசுத்தரும் தூயருமானவர். நான் பாவம் நிறைந்தவன். என் பாவங்களே கடவுளை அணுக முடியாமல் என்னை பிரிக்கின்றன என்று அறிந்தேன்.

“தேவனே, நான் என்ன செய்வேன்?” என்று நம்பிக்கையற்று அழுதேன். “உனக்கு நம்பிக்கை உள்ளது” என்று அந்த நற்செய்தி விளம்பினது. “தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து உன் பாவங்களுக்காக பாடுபட்டு சிலுவையில் மரித்தபோது உன் பாவங்களை நீக்கி படுகுழி மேல் உன்னை தேவனிடம் கொண்டு சேர்க்கும் பாலமானார்.”

நான் இயேசுவிடம் ஓடி சென்று அவர் காலடியில் மண்டியிட்டேன். “ஆண்டவரே, நான் என் பாவங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினேன். சிலுவையில் என் தண்டனையை செலுத்தினதினால் ஆண்டவர் இயேசு மகிழ்ச்சியுடன் என் பாவங்களை மன்னித்தார். இப்போது நான் என் பாவ கரையில் இருந்து கழுவ பட்டு சுத்தமாமானேன்!

இயேசு என் கையை பிடித்தார். நாங்கள் ஒன்றாக படுகுழி பக்கம் திரும்பினோம். என்ன ஆச்சரியம்! பாளத்தின் மேல் ஒரு பாலம் இருந்தது. அது சிலுவை வடிவத்தில் இருந்தது! நான் என் ஆண்டவரை பின்பற்றி அந்த பாலத்தின் மேல் சென்றேன். சென்று எனக்காக காத்து கொண்டிருந்த தேவனாகிய பிதாவை சேர்ந்தேன். என் ஆனந்தத்திற்கு அளவு இல்லை. தேவனுடைய பாதத்தில் விழுந்து அவரை துதி செய்தேன்.

நான் திரும்பி மனிதரை கடவுளிடமிருந்து பிரிக்கும் பாவ பாளத்தை தாண்டி அக்கறை நோக்கினேன். அங்கு அநேக மக்கள் கடவுளை அடைய வெவ்வேறு வழிகளில் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அனால் எல்லாரையும் பாவமாகிய படுகுழி நிறுத்தி விட்டது. எந்த மத வழி மூலமும் பாளத்தை அவர்களால் கடக்க முடியவில்லை. ஆண்டவர் இயேசுவிடம் என்னை போல வந்து பாவ மன்னிப்பை பெற்றவர்களோ அவரோடு பெரும் சந்தோஷத்தோடு சிலுவை பாலத்தின் மேல் படுகுழியை தாண்டி தேவனிடம் சேர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இப்போது நான் ஆண்டவர் இயேசு கூறின வசனத்தின் சத்தியத்தை அறிந்தேன்: இயேசு பைபிளில் சொல்கிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” யோவான் 14:6

இது ரவியின் ஆன்மீக பயணம். அவர் இப்போது தன் பழைய பாவ வாழ்க்கையை விட்டு விட்                டு, புது மனிதனாய் ரட்சகர் இயேசுவுக்காக பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறார். எல்லாருக்கும் கடவுளை சேர ஒரே வழியை எப்படி கண்டு பிடிப்பது என்று சொல்கிறார். நீங்கள் எப்படி, நண்பரே? கர்த்தராகிய இயேசுவிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்று கடவுளை சேர வழி கண்டீர்களா?

ஜெபம்: “கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்த தேவனை சேர நீரே ஒரே வழி என்று நான் என் முழு மனதோடு நம்புகிறேன். என் பாவத்திற்காக நீர் சிலுவையில் செய்த தியாகத்தின் மூலம் என்னை தேவனிடம் சேர்த்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *