முதலடி 31: அன்பான நண்பனே, உனக்காக என் ஜெபம்

இந்த அருமையான  வேத பாடங்கள் வழியாக நாம் ஒன்றாக இருந்து ஆண்டவர் இயேசுவின் பின் முதல் அடிகள் எடுத்து வைத்து நம் புது வாழ்வை துவங்கி இருக்கிறோம்.

நாம் இருவரும் ஒன்றாக ஆண்டவரை பின்பற்றி சென்ற இந்த பிரயாணம் எனக்கு இருந்தது போலவே உனக்கும் பரவசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு அன்பான ரட்சகராக இருப்பது  போலவே உனக்கும் இருக்க ஜெபிக்கிறேன். இந்த பாடலின் வரிகள் இவ்வாறாக நாம் ஆண்டவரோடு நடப்பதன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது:

“ஓ இன்ப நாள், இன்ப நாள்,

நான் மறக்க முடியாத நாள்.

இருளில் நான் தேடி அலைந்த போது

இயேசு, என் ஆண்டவரை சந்தித்தேன்.

என்ன அருமையான, ஆதரவான நண்பன் அவர்.

என் இதய வாஞ்சையை நிறைவேற்றினார்.

நிழலானவை மறைந்தன, சந்தோஷத்தை கூறுவேன்.

எல்லா இருளையும் விலக்கி விட்டார்.

மோட்சம் இறங்கி, மகிமை என்னை நிரப்பியது.

சிலுவையின் ரட்சகரால் நான் முழுமை ஆனேன்.

என் பாவங்கள் கழுவப்பட்டது, இரவு வெளிச்சமாக  மாறியது.”

அன்பான நண்பனே, ஆண்டவர் இயேசுவோடு நீ நடக்க இந்த அழகான பாடல் உன்னை வழி நடத்தும் என்று நம்பிக்கையோடு ஜெபிக்கிறேன். நாளுக்கு நாள் இயேசுவின் மேல் நீ கொண்டிருக்கும் அன்பும், நம்பிக்கையும் வளரவும், தினம்தோறும் ரட்சகர் இயேசுவை பின் பற்றி அவர் போல நீ மாறவும் ஜெபிக்கிறேன்.

“ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்துவை நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும் படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார்.”   பிலிப்பியர் 2:9 – 11.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *