முதலடி 28: ஆண்டவராகிய இயேசு திரும்பவும் வருகிறார்

ஆண்டவர் இயேசு உயிரோடு இருக்கிறார்! அவருடைய சீடர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு    இருந்தனர். இயேசு நாற்பது நாட்கள் வரை அவர்களோடு இருந்து அவருடைய ராஜ்யத்தை குறித்து அவர்களுக்கு கூறினார்.

சீடர்களை விட்டு அவர் பரலோகமாகிய மோட்சம் செல்லும் நேரம் வந்தது. அவர்கள் பார்த்து கொண்டுருக்கும் பொழுதே மோட்சத்துக்கு சென்றார். மேகம் அவரை மறைத்து விட்டது.

அப்போது இயேசு போவதை பார்த்து கொண்டிருந்த சீடர்களுக்கு முன் வெண்ணிற ஆடை  அணிந்த இரண்டு தேவ தூதர்கள் தோன்றினார்.

வானத்தை ஏன் அண்ணாந்து பார்த்து கொன்டிருக்கிறீர்கள்? இதே இயேசு உங்கள் முன் பரலோகத்திற்கு எப்படி ஏறி சென்றாரோ அதே போல திரும்பவும் பரலோகத்தில் இருந்து வருவார்என்றனர். இந்த நற்செய்தியை கேட்டு சீடர்கள் மகிழ்ந்தார்கள்.

விசுவாசிகளான நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாக்குத்தத்தம் எவ்வளவு அருமை ஆனது! நம் ஆண்டவர் திரும்பவும் வருகிறார்!  இதை குறித்து தேவன் என்ன சொல்லி இருக்கிறார்?

இயேசுவின் வருகை பிதாவுக்கு மட்டுமே தெரியும். எக்காள சத்தம் கேட்க தேவ தூதர்களோடு  மேகத்தில் அவர் தம் மகிமையில் வருவார். எல்லாருடைய கண்களும் அவரை காணும்.

ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் அவர் வருவார். இந்த பூமியை நீதியாகவும், நியாயமாகவும் ஆளுகை செய்வார்.

ஆண்டவருடைய பிள்ளைகள் யாவரையும் ஒன்றாக கூட்டி சேர்ப்பார். அவரை பாவத்திலிருந்து விடுதலை செய்யவும் ரட்சகராக ஏற்று கொள்ளாத ஒவ்வொருவரையும் நியாயம் தீர்க்க வருவார்.

வேதம் இதை ஆசீர்வாதமான நம்பிக்கை என்றும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிமையின் வெளிப்படுதல் என்று கூறுகிறது.

ஆண்டவருடைய வருகைக்கு நாம் காத்திருக்கும் பொழுது அவர் நம்மை விழித்திருந்து ஜெபிக்க சொல்லுகிறார்.

வேதத்தில் கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷத்தில் நிச்சயமாகவே நான் சீக்கிரம் வருகிறேன்என்ற மகிமையான உறுதியை ஆண்டவர் இயேசு கொடுத்திருக்கிறார்.

நாம் பதிலுக்கு சந்தோஷமாக “ஆமென் ஆண்டவர்  இயேசுவே, வாரும் என்போம்.

ஜெபம்: “ஆண்டவர் இயேசுவே, உம்முடைய இரண்டாம் வருகைக்கு காத்திருக்கிறோம்.   ஆயத்தமாக இருக்க உதவி செய்யும். ஆமென்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *